27 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

 27 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசுஉத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து அரசு வெளியி்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எஸ்.கே பிரபாகர் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளராகவும், என்.எஸ். பழனியப்பன் எரிசக்தி துறை கூடுதல் தலைமை செயலாளராகவும்,
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளராக அமுதாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு சிமெண்ட் கழக நிர்வாக இயக்குனராக சி.காமராஜ், பி.உமாநாத் நிதித்துறை(செலவினம்) செயலாளரகவும், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக வெங்கடேசன், சிறு, குறு நடுத்தர நிறுவன செயலாளராக மங்கத்ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளனர்.