அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிசார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு வருகிற 11ம் தேதி கூடுகிறது.

கூடுகிறது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு. அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிசார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு வருகிற 11ம் தேதி கூடுகிறது. 7வது ஊதியக்குழுவான இது, ஏற்கனவே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுகுறித்து பரிந்துரைக்க முடிவுசெய்துள்ளது.
அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான இந்தக் குழு, தனது பரிந்துரைகளை இறுதிசெய்து அரசுக்கு அளிக்கவிருக்கிறது. இது, தனது பரிந்துரையில் ரூ.21 ஆயிரம் முதல் ரூ.2.7 லட்சம் வரை அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த உயர்வானது கீழ்மட்ட ஊழியர்களுக்கு ரூ.3,000 அதிகமாகவும், உயர்மட்ட ஊழியர்களுக்கு ரூ.20,000 அதிகமாகவும் இருக்கும். இந்த உயர்வின் காரணமாக, 47 லட்சம் மத்தியஅரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியம் பெறுவோரும் பயனடைவார்கள்.