TANCET 2016 | டான்செட் தேர்வில் பங்கேற்க விருப்பமா... கால அவகாசம் நீட்டிப்பு...!!

டான்செட் தேர்வில் பங்கேற்க விருப்பமா... கால அவகாசம் நீட்டிப்பு...!!
என்ஜினீயரிங் படிப்புகள் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர உதவும் டான்செட் தேர்வுக்காக விண்ணப்பிப்பதற்கு கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டிப்புச் செய்துள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு https://www.annauniv.edu/tancet2016/ என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் மே 21-ஆம் தேதி வரை மாணவ, மாணவிகள் பதிவு செய்துகொள்ளலாம்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை "டான்செட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. 2016-ஆம் ஆண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வு, எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு ஜூன் 11-ஆம் தேதியும், முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 12-ஆம் தேதியும் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுகளுக்கு ஆன்-லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த ஆன்-லைன் பதிவுக்கு மே 17 கடைசி நாள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்தக் கால அவகாசம் மே 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆன்-லைனில் பூர்த்தி செய்து டவுன்லோடு செய்ய விண்ணப்பத்தோடு, பதிவுக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவு மாணவர்கள் ரூ. 250-ஐ செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://www.annauniv.edu என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு அறியலாம்