TAMIL NADU ENGINEERING ADMISSIONS - 2016 (TNEA 2016) | LAST DATE 31.05.2016

TAMIL NADU ENGINEERING ADMISSIONS - 2016 (TNEA)

இன்ஜினியர் படிப்பிற்கு ஆன்லைனில் வண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழக பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார். இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு பூர்த்தி செய்து அனுப்பும் விண்ணப்பங்களுக்கான காலக்கெடுவும் ஜூன் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
தமிழ்நாடு முழுவதும் 538 அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சம் இடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்த உள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக பிளஸ்- 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.இதுவரை, 190438 மாணவ - மாணவிகள் தங்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 118079 பேர் விண்ணப்பத்திற்கான பணத்தையும் செலுத்தியுள்ளனர்.
பதிவு செய்த மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளிவந்த பிறகு அவர்கள் எடுத்த மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவு செய்து, பின்னர் அதை பதிவிறக்கம் செய்து, பிளஸ்-2 முடிவு வெளியான 10 நாட்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்துசேரும்படி தபாலில் அனுப்ப வேண்டும்.