'வாட்ஸ் ஆப்'பில் 'ரிசல்ட்' அவுட்

சிவகங்கை: 'தமிழகம் முழுவதும் நேற்று காலை 10:31 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும்' என அரசு தேர்வுத்துறை அறிவித்தது. அதன்படி முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளியிடுவதற்கு முன்பே, காலை 9:30 மணிக்கே மாவட்ட அளவிலான தேர்வுமுடிவுகள் 'வாட்ஸ் ஆப்'பில் வெளிவர துவங்கின.
மேலும் தேர்வு முடிவுகளும் முன்னுக்கு பின் முரணாக வந்தன. இதனால் பள்ளிநிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காலை 6 மணிக்கு அந்தந்த பள்ளிகளுக்கு உரிய தேர்வு முடிவுகளை கொடுத்து விட்டோம். அவர்களிடம் காலை 10:31 மணிக்கு பின்பே முடிவுகளை வெளியிட சொன்னோம். ஆனால் சில பள்ளிகள் காலை 9 மணிக்கே வெளியில் தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது, என்றார்.