ஏர் இந்தியா நிறுவனத்தில் 300 விமானப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஏர் இந்தியா நிறுவனத்தில் 300 விமானப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 300 விமானப் பணியாளர்  பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Traniee Cabin Crew
காலியிடங்கள்: ஆண்கள் - 75, பெண்கள் - 225
சம்பளம்: மாதம் ரூ.35,075
வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் Hotel Management and Catering Technology பிரிவில் பட்டயம் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை "AIR INDIA LIMITED" என்ற பெயரில் தில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. டி.டி.யை குழு விவாதம், Personality Assessment தேர்வுகளின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் Personality Assessment தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.