சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவு இன்று வெளியீடு?

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகும் என தெரிகிறது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் உள்ள பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 1ல் பொதுத் தேர்வு துவங்கி, ஏப்ரலில் முடிந்தது; 10.67 லட்சம் பேர் பங்கேற்றனர்.

தேர்வு முடிவுகள், மே, 23ல் வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன், இன்று பகல், 12:00 மணிக்கு வெளியிடப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்வு முடிவுகளை, http:/cbse.nic.in மற்றும் http:/cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.இந்த ஆண்டு கணித தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக, மாணவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அதனால், கணித வினாத்தாள் குறித்து ஆய்வு
செய்யவும், கூடுதல் கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்கவும், சி.பி.எஸ்.இ., சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.இந்த குழு, பெற்றோர், மாணவர் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை பெற்று, தேர்வு கமிட்டிக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு போதிய மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கும் என, மாணவர், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.