1,429 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 9,500 பேர் 'சென்டம்'

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 10 அரசு பள்ளிகள் மாநில, 'ரேங்க்' பெற்றுள்ளதாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தமிழக அரசின் பல சிறப்பு திட்டங்கள் மூலம், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவித்ததால், அரசு பள்ளிகள், 90.21 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் மாணவர்களை விட, மாணவியர், 6.40 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,429 அரசு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கடந்த, 2013ல், 453; 2014ல், 558; 2015ல், 1,164 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. இந்த ஆண்டு, 265 பள்ளிகள் கூடுதலாக, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசு பள்ளிகளில், கணிதத்தில், 1,279; அறிவியலில், 1,752; சமூக அறிவியலில், 6,469 பேர், 100க்கு, 100 பெற்றுள்ளனர். மொத்தம், 9,500 பேர், 'சென்டம்' பெற்றுள்ளனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாநில அளவில் முதல், மூன்று இடங்கள் பெற்றவர்கள்:
முதல் இடம்: 498 மதிப்பெண்
1. என்.ஜனனி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டூர், மலையாண்டிபட்டினம், கோவைஇரண்டாம் இடம்: 496 மதிப்பெண்
1. எஸ்.ஸ்வேதா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காவேரிபட்டினம், கிருஷ்ணகிரி
2. எப்.நேகா கவுஸர், டி.எம்.டி.எத்திராஜ் அம்மாள் முதலியாண்டார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சோளிங்கர், வேலுார்மூன்றாம் இடம்: 495 மதிப்பெண்
1. ஹரிணி, வி.கே., அரசு மேல்நிலைப்பள்ளி, சவக்காட்டுபாளையம், ஈரோடு
2. எம்.பவதாரிணி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோதமங்கலம் புதுக்கோட்டை
3. எம்.நிஷாத் ரஹிமா, ராணிஸ் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை
4. ஆர்.சந்திரசேகர், அரசு மேல்நிலைப் பள்ளி, மலைக்கோவிலுார், கரூர்
5. எஸ்.மேகலா, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெருங்காட்டூர், திருவண்ணாமலை
6. என்.தீபா, அரசு உயர்நிலைப் பள்ளி, இரும்பேடு, திருவண்ணாமலை
7. யு.கேத்தரின் அமல ராகினி, ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை, விருகம்பாக்கம்