கடலூரில் 1182 மதிப்பெண் எடுத்து மாணவி முதலிடம்

சிதம்பரம், பிளஸ்டூ அரசு பொதுத்தேர்வில் 1182 மதிப்பெண்கள் பெற்று சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சி.ஆர்.ரத்தினாதேவிஸ்ரீ கடலூர் மாவட்டத்தில் முதலிடத்தையும், சிதம்பரம் நகரில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பிளஸ்டூ தேர்வில் 1182 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி ரத்தினாதேவிஸ்ரீ பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 191, ஆங்கிலம்- 195, இயற்பியல்- 199, வேதியியல்-199, உயிரியல்-198, கணிதம்-200, மொத்தம்- 1182. இவரது தந்தை சி.ரவிகண்ணன் பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்அறிவியல் புலத்தில் முதுநிலை கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார்.
தாயார் உஷாராணி சிதம்பரம் ராமசாமி செட்டியார் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். மாணவி ரத்தினாதேவிஸ்ரீ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 494 பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாணவி ரத்தினாதேவிஸ்ரீ தெரிவித்தது: பள்ளியில் ஆசிரியர்களின் ஊக்கமும், கல்வி பயிற்சியும்தான் நான் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு காரணமாக இருந்தது.
மருத்துவம் படிக்க வேண்டும் எனது ஆசை. அப்படியில்லையெனில் பிஇ ஆர்க்கிடெக் படிப்பேன் என தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி ரத்தினாதேவிஸ்ரீயை பள்ளி நிர்வாகி வீனஸ் எஸ்.குமார், அவரது துணைவியார் ரூபியாள்ராணி, தலைமை ஆசிரியர் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.