சென்னைக்கு சிறப்பு ரயில்கள்

மே மாதம் சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.மே 6 மற்றும் 13 ம் தேதியில் சென்னையில் இருந்து இரவு 9:05க்கு கிளம்பும் சிறப்பு ரயில் (எண் 00603) மறுநாள் காலை 10:45 மணிக்கு நெல்லை சென்று சேரும்.
மே 8 மற்றும் 15ம் தேதியில் நெல்லையில் இருந்து மதியம் 2:45க்கு கிளம்பும் சிறப்பு ரயில் (எண் 00602) மறுநாள் அதிகாலை 4:15 மணிக்கு சென்னை சென்று சேரும்.