அரசு மற்றும் அரசு
உதவிபெறும் பொறியியல் கல்லுாரிகளில்,
2016 - 17ம் கல்வியாண்டில், பகுதி நேர, பி.இ., - பி.டெக்., பட்டப்படிப்புகளுக்கு,
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழில்நுட்ப கல்வி இயக்குனர்
மதுமதி விடுத்துள்ள
அறிக்கை: கோவை,
சேலம், திருநெல்வேலி,
வேலுார், பர்கூர்,
அரசு பொறியியல்
கல்லுாரி; காரைக்குடி
அழகப்ப செட்டியார்
பொறியியல் கல்லுாரி;
கோவை இன்ஸ்டிடியூட்
ஆப் டெக்னாலஜி,
மதுரை தியாகராஜர்
பொறியியல் கல்லுாரி
ஆகியவற்றில், பகுதி நேர பி.இ.,
- பி.டெக்.,
பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
* விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்
அன்று, பட்டயப்
படிப்பு முடித்து,
இரண்டு ஆண்டுகள்
முழுமையாக நிறைவு
பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
* விண்ணப்பதாரர் பணிபுரிபவராகவும், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருக்கவும்
வேண்டும்
* www. ptbe-tnea.com என்ற
இணையதளம் வாயிலாக,
விண்ணப்பிக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பித்த
பின், அதை
பிரதி எடுத்து,
உரிய ஆவணங்கள்
மற்றும் பதிவுக்
கட்டணத்துடன் அனுப்பி வைக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு,
www.ptbe-tnea.com இணையதள முகவரியில், 'Information and Instructions to
Candidates' என்ற பக்கத்தில் பார்க்கவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.