ஜே.இ.இ., 'ரிசல்ட்' வெளியீடுகுறைந்தபட்ச 'கட் ஆப்' 100

ஜே.இ.இ., 'ரிசல்ட்' வெளியீடுகுறைந்தபட்ச 'கட் ஆப்' 100
உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற வற்றில் பி.இ., -பி.டெக்., படிப்பதற்கான ஜே.இ.இ., முதன்மை தேர்வு முடிவு, நேற்று வெளியானது. குறைந்தபட்ச, 'கட் ஆப்' மதிப்பெண், 100 என அறிவிக்கப்பட்டு உள்ளது.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்தநுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
10 லட்சம் பேர்...
இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ., முதன்மை தேர்வு, நாடு முழுவதும், ஏப்ரல், 3ல் எழுத்துத் தேர்வாகவும்; ஏப்ரல், 9, 10ல், 'ஆன்லைன்' வழியிலும் நடந்தது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.தமிழகத்தில், 7,000 பேர் இந்த தேர்வை எழுதினர். காலை, மாலை என, இரண்டு வேளைகளில் நடந்த தேர்வில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான தாளில், கடந்த ஆண்டை விட கேள்விகள் எளிமையாகவே இருந்தன.ஜே.இ.இ., முதன்மை தேர்வு முடிவு, நேற்று மாலை வெளியானது.நாளை முதல்...மொத்தம், 360 மதிப்பெண்களில், குறைந்தபட்ச, 'கட் ஆப்' மதிப்பெண், 100 என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவு மாணவர்கள், 100 மதிப்பெண், இதர பிற்படுத்தப்பட்டோர், 70; தலித் இனத்தவர், 52; பழங்குடியின மாணவர், 48 மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்கள், இரண்டாம் கட்ட தேர்வான, ஜே.இ.இ., 'அட்வான்ஸ்ட்' தேர்வை எழுத முடியும்.'குறைந்தபட்ச, 'கட் ஆப்' மதிப்பெண் பெற்றவர்கள், மே, 22ல் நடக்க உள்ள, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.