அரசு
ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்), கிஸான் விகாஸ்
பத்திரம், செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஆகியவற்றுக்கான வட்டியை மத்திய அரசு
குறைத்துள்ளது. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஒவ்வொரு
காலாண்டுகளிலும் மாற்றி அமைப்பது என கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி மத்திய
அரசு தீர்மானித்தது.
இந்நிலையில்
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை உள்ளடக்கிய காலாண்டுக்கான வட்டி விகிதங்கள்
மாற்றி அமைத்து மத்திய நிதி அமைச்சகம் இன்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொது வருங்கால வைப்பு நிதிக்கான (பி.பி.எப்) வட்டி வீகிதம் 8.7
சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதேபோல கிஸான் விகாஸ்
சிறுசேமிப்பு பத்திரங்களுக்கான வட்டி வீகிதம் 8.7 சதவீதத்திலிருந்து 7.8
சதவீதமாக குறைக்கப்படுகிறது. மேலும், ஐந்து ஆண்டுகளுக்கான தேசிய சேமிப்பு
பத்திரங்களுக்கான வட்டி வீகிதம் 8.5 சதவீத்திலிருந்து 8.1 சதவீதமாக
குறைக்கப்படுகிறது.
செல்வ
மகள் சேமிப்பு திட்டம் இதேபோல், பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டு
அமோக வரவேற்பை பெற்ற செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி வீகிதமும்
9.2 சதவீதத்திலிருந்து 8.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மேலும், மூத்த
குடிமக்களுக்கான ஐந்து ஆண்டு சேமிப்பு திட்டத்துக்கான வட்டி வீகிதம் 9.3
சதவீதத்திலிருந்து 8.6 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அஞ்சலகங்களில்
சேமிக்கப்படும் ஓராண்டு, ஈராண்டு, மூன்று ஆண்டுகளுக்கான வட்டி வீகிதங்களும்
குறைக்கப்பட்டுள்ளன