350 மருந்துகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு

அங்கீகாரம் பெறாத தயாரிப்பு முறையில் உற்பத்தியாகும் எப்.டி.சி., ரக மருந்துகளான பென்ஸிடில், கோரஸ் உள்ளிட்ட 350 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.
வலி நிவாரணத்திற்கு உட்கொள்ளப்படும் இவ்வகை மருந்துகளின், மார்க்கெட் மதிப்பு ரூ.1,500 கோடி இருக்கும் என மருத்துவத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இத்தடை குறித்த அரசிதழ் அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.