பிளஸ் 2 தேர்வில் முறைகேடு

பிளஸ் 2 தேர்வில் முறைகேடு செய்ததாக, 39 பேர் சிக்கி உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று தமிழகம் முழுவதும், 39 பேர் முறைகேடு மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக சிக்கினர். இதில், உயிரியல் தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டும், 30 பேர்; வரலாற்றில், ஏழு பேர்; வணிக கணிதம் மற்றும் தாவரவியலில் தலா ஒருவரும் சிக்கினர்.
அவர்களிடம், விடைத்தாள்கள் வாங்கப்பட்டு, தேர்வு அறையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, வெளியேற்றப்பட்டனர்.