தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

    சென்னை : சட்டப் பேரவையின் 11வது கூட்டத் தொடர் ஜனவரி 20ல் கவர்னர் உரையுடன் துவங்கி, 23ம் தேதி வரை நடைபெற்று, பின் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த கூட்டம் இன்று(பிப்., 16) கூடுகிறது.

 
               இக்கூட்டத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கலாக உள்ளது. சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடைசி கூட்டத் தொடர் இது என்பதால், கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பான விவாதங்கள் அதிகளவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.