இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

நாடு முழுவதும், இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம், இன்று நடக்கிறது. தமிழகத்தில், 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.குழந்தைகளுக்கு, இளம்பிள்ளை வாத நோய் வராமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் போலியோ தடுப்புக்கான முதற்கட்ட முகாம், ஜன., 17ம் தேதி நடந்தது.



தமிழகத்தில், 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட திட்டமிடப்பட்டு, 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போடப்பட்டது.இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு முகாம், நாளை நடக்கிறது. தமிழகம் முழுவதும், 43 ஆயிரத்து, 51 முகாம்கள், 1,652 நகரும் மையங்கள் மற்றும் ௧,௦௦௦ நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்படுகின்றன. இப்பணியில், இரண்டு லட்சம் ஊழியர்ஈடுபடுகின்றனர். 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.மறந்துடாதீங்க...!
● ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்
● முதல் தவணை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், இரண்டாம் தவணையும் சொட்டு மருந்து தர வேண்டும்
● புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும், சில நாட்களுக்குமுன் சொட்டு மருந்து தரப்பட்ட குழந்தைகளுக்கும், மீண்டும் சொட்டு மருந்து தர வேண்டும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.