பெட்ரோல் விலை ரூ. 3.02 குறைப்பு; டீசல் ரூ. 1.47 அதிகரிப்பு

பெட்ரோல் விலையை குறைத்துள்ள எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்தியுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதற்கேற்றார்போல் குறைக்கப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை 25 அமெரிக்க டாலருக்கும் குறைந்த நிலையில், இந்தியாவில் கலால் வரி உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் இன்று திடீர் திருப்பமாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3.02 அளவுக்கு குறைத்துள்ளன. அதேநேரத்தில் டீசல் விலை ரூ. 1.47 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றங்கள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.