பிப்ரவரி 22 -இல் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை

கும்பகோணம் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு 3 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு வரும் 22 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.
பிப்ரவரி 22 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள வங்கிகள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.