ரயில்வே பட்ஜெட் 2016-17

நோக்கம்: சாவல்களை மேற்கொள்ளும் வகையில் ரயில்வே நிர்வாகம் Reorganize (ஒருங்கிணைப்பு), Restructure (மறுகட்டமைப்பு), Rejuvenate (புத்தாக்கம்) செய்யப்படும். புதிய வருவாய், புதிய வழிமுறைகள், புதியஅமைப்பு என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

  • 2016-17 ஆம் ஆண்டின் வருவாய் ரூ. 1,84,820 கோடியாக இருக்கும்.
  • பயணிகள், சரக்கு கட்டண உயர்வு இல்லை
  • 2015-16 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 199 திட்டங்களுக்கானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • ஆள் இல்லா ரயில்வே கிராசிங் அனைத்தும் வருகிற 2020 ஆம் ஆண்டுக்குள் நீக்கப்படும்.
  • புதிதாக 17,000 நவீன கழிப்பறை (பயோ டாய்லெட்) வசதி ஏற்படுத்தப்படும். மேலும், 475 ரயில் நிலையங்களில் கூடுதல் கழிவறை வசதி இந்த நிதியாண்டுக்குள் ஏற்படுத்தப்படும்
  • மூத்தகுடிமக்கள் மற்றும் பெண்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.
  • நிகழ் ஆண்டில் 100 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும். இது அடுத்த ஆண்டில் 400 ஆக உயர்த்தப்படும்.
  • ஒரு நிமிடத்தில் 7,200 டிக்கெட்கள் பதிவு செய்யும் வகையில் மின்னணு வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 1.2 லட்சம் பேர் இணையதளத்தை பயன்படுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த காலங்களில் 40 ஆயிரமாக இருந்தது.
  • முக்கியமான ரயில் நிலையங்கள் அனைத்திலும் சி.சி.டி.வி காமிராக்கள் பொருத்தப்படும்.
  • நெடுந்தூரம் செல்லும் ரயில்களில் 'தீன் தயாள்' என்ற பெயரில் முன்பதிவு செய்யப்படாத பெட்டி இணைக்கப்படும். இந்த பெட்டிகளில் தண்ணீர், மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி செய்து தரப்படும்.
  • ரயில்களில் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளூர் உணவுவகைகள் பறிமாறப்படும்.
  • குறுந்தகவல்கள் அனுப்புவதன் மூலம் ரயில் பெட்டிகள் தூய்மை செய்யப்படும்.
  • குழந்தைகளுக்கான உணவு வகைகளும் ரயிலில் வழங்கப்படும்.
  • ரயில் பெட்டிகளில், குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் மூலம் அடுத்து வரும் ரயில் நிலையங்கள் குறித்த அறிவிப்பு செய்யப்படும்.
  • 139 எண் மூலம் முன்பதிவு ரத்து வசதி ஏற்படுத்தப்படும்.
  • டிக்கெட் இன்றி பயணம் செய்வோரை தடுக்கும் வகையில் ரயில்வே டிக்கெட்டுகளில் 'பார்கோடு'  வசதி சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படும்.