ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். 
புதிதாக 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்து எடுக்க உள்ளது. இதற்கான அனுமதியை பள்ளிக்கல்வித்துறை வழங்கி உள்ளது. இனிமேல் எப்படி தேர்ந்து எடுக்கிறது. எந்த பாடத்திற்கு எத்தனை ஆசிரியர்கள் என்ற விவரம், எந்த தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்ற முழு விவரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்க உள்ளது.