MRB RECRUITMENT 2016 | 710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்- தரம் 3 (லேப் டெக்னீசியன் கிரேட்- 3) வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 1.2.2016... விரிவான விவரங்கள் ...

710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு | அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்- தரம் 3 (லேப் டெக்னீசியன் கிரேட்- 3)
பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. மருத்துவப்
பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இந்தப் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்வி இயக்ககத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் ஓராண்டு மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம் பயின்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்ரவரி 1-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ்-2, ஆய்வகத் தொழில்நுட்பப் படிப்பு ஆகியவற்றின் மதிப்பெண்களின்படி தகுதிகாண் மதிப்பெண் கணக்கிடப்பட்டு, தேர்வு செய்யப்படுவர்.