வேலைக்கு தகுதியில்லாத இன்ஜினியர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடில்லி:இந்தியாவில் உள்ள இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 80 சதவீதம் பேர், திறமை குறைவானவர்களாக உள்ளதாகவும், அதனால், அவர்களை பணியில் அமர்த்த முடியாத நிலை உள்ளதாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும், லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள், படிப்பை முடித்து, வேலை தேடிச் செல்கின்றனர். ஆனால், 'அவர்களிடம் வேலை செய்வதற்கு தேவையான போதிய திறமை இல்லை' என, கார்ப்பரேட் நிறுவனங்கள் குறை கூறுகின்றன.கடந்த, 2015ல், 650 பொறியியல் கல்லுாரிகளில் பயின்று பட்டம் பெற்ற, 1.50 லட்சம் மாணவர்களிடம், தனியார் அமைப்பு ஆய்வு நடத்தியது;
அதில் வெளியான முடிவுகள் விவரம்:நம் நாட்டில் பொறியியல் பட்டம் என்பது, ஒப்புக்கு பெறுவதாகவே உள்ளது. இந்நிலையை மாற்ற, கல்வித் தரத்தை வெகுவாக உயர்த்த வேண்டும். பணியிடங்களில் உள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும்.மூன்றாம் நிலை நகரங்களில் கூட, வேலைக்கு தேர்வாகும் திறமையுடன் இன்ஜினியர்கள் உருவாகின்றனர். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், இன்ஜினியர்களுக்கான தேவைகளை, மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த இன்ஜினியர்கள் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டில்லி 'டாப்':
நகரங்களைபொறுத்தவரை, டில்லியில் பயிலும் இன்ஜினியரிங் மாணவர்களில் பெரும்பாலானோர், வேலைக்கு தேர்வாகும் திறனுடன் உள்ளனர். அடுத்ததாக, பெங்களூரு உள்ளிட்ட சில நகரங்களை சேர்ந்த மாணவர்கள், திறன் மிக்கவர்களாக உள்ளனர்.கேரளா, ஒடிசா மாநிலங்களில், 25 சதவீத இன்ஜினியர்கள்