அரசு தொழில் பயிற்சி நிலையங்களில்
(ஐடிஐ) காலியாக உள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கு வருகிற
பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து வேலூர் அரசு தொழில் பயிற்சி நிலையம்
சார்பில் இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில்
காலியாக உள்ள 329 இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம்
நிரப்பப்பட உள்ளது.
மேல்நிலை வகுப்பு மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு
வயது வரம்பு இல்லை. www.skilltraining.tn.gov.in என்ற ஆன்லைனில் வருகிற
பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாவட்டத்தைச்
சேர்ந்தவர்கள் விண்ணப்பித்த விவரங்களை முதல்வரிடம் நேரில் சமர்ப்பிக்க
வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.