குரூப் 2ஏ தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இது குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா வியாழக்கிழமை
வெளியிட்ட அறிவிப்பு:
ஒருங்கிணைந்த குடிமைப்
பணிகளுள் தொகுதி 2ஏ (நேர்காணல் அல்லாத பதவிகள்) பிரிவில் அடங்கிய ஆயிரத்து
947 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 24-ஆம் தேதியன்று
நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு 8.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்
பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு
செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய
விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு www.tnpscexams.net
மற்றும் www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை
(Registration ID) உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டை பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம். நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், தங்களது
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை நிராகரிப்புப் பட்டியலில்
அறிந்து கொள்ளலாம்.
நிராகரிப்புப் பட்டியலில் இடம்பெறாத,
சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம்
செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள்,
தாங்கள் பணம் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் தேர்வாணையத்தின் மின்னஞ்சல்
முகவரியான contacttnpsc@gmail.com க்கு, வரும் 19-ஆம் தேதிக்குள் அனுப்ப
வேண்டும்விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்ப பதிவு
எண் (Registration ID), விண்ணப்ப தேர்வுக் கட்டணம் (ரூபாய்), கட்டணம்
செலுத்திய இடம், அஞ்சலகம், வங்கி, வங்கிக் கிளை, அஞ்சலக முகவரி என்ற
வரிசையில் தகவல்களை அனுப்ப வேண்டும்.. நுழைவுச் சீட்டை பதிவிறக்கம்
செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற
கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற
மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என சோபனா தெரிவித்துள்ளார்.