12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் இன்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதவாது:  (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)

    1. மாநில கிராமப்புற சுகாதார இயக்ககத்தின் திட்ட இயக்குநராக இருந்து வந்த ஷம்பு கல்லோலிகர்--வேளாண்மைத் துறை ஆணையாளர் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
     2. ஆர்.லலிதா---கூட்டுறவு-உணவு-நுகர்வோர் பாதுகாப்பு துணைச் செயலாளர் (சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்)
     3. தயானந்த் கட்டாரியா---சிறுபான்மையினர் நலத் துறை ஆணையாளர் (தில்லி மேம்பாட்டு ஆணையரக முன்னாள் ஆணையாளர்)
     4. ஏ.சுகந்தி---ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறை இணைச் செயலாளர் (தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர்)
     5. பி.செந்தில்குமார்---கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளத் துறை இணைச் செயலாளர் (பட்டு வளர்ப்புத் துறை முன்னாள் இயக்குநர்)
     6. ஜி.கே.அருண் சுந்தர் தயாளன்---ஆதி திராவிடர்-பழங்குடியினர் நலத் துறை துணைச் செயலாளர் (சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையாளர்-மத்தியம்)
     7. ஹேமந்த் குமார் சின்கா---டான்சி நிறுவனத்தின் தலைவர்-நிர்வாக இயக்குநர் (இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர்)
     8. சுப்ரியா சாகு---தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (தகவல்-ஒலிபரப்புத் துறை இணைச் செயலாளர்)
     9. சுபோத்குமார்----சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையாளர்-மத்தியம் (பள்ளி கல்வித் துறை துணைச் செயலாளர்)
     10. ராஜேந்திர ரத்னு---சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையாளர் (பூம்புகார் கப்பல் கழகத்தின் நிர்வாக இயக்குநர்)
     11. ஸ்மிதா நாகராஜ்---ராணுவத் துறை இயக்குநர் ஜெனரல் --கொள்முதல் பிரிவு (தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர்)
  கூடுதல் பொறுப்பு: 5-வது மாநில நிதி ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் பொறுப்பு, கூடுதல் பொறுப்பாக நிதித் துறையின் துணைச் செயலாளராக உள்ள பிரஷாந்த் எம்.வாட்னேரேவிடம் அளிக்கப்படுவதாக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.