பல்கலைகளுக்கு யு.ஜி.சி., அறிவுரை

கல்லுாரிகளில், தர மதிப்பீட்டு முறையை பின்பற்ற, பல்கலைக்கழக மானியக் குழு - யு.ஜி.சி., அறிவுறுத்து உள்ளது.தேர்வில், மதிப்பெண் மற்றும், 'ரேங்க்' வழங்கப்படுவதற்கு பதில், கிரெடிட் எனப்படும் தர மதிப்பீட்டு எண்
வழங்கப்படும் முறை, சில ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்டது; எனினும், தமிழகம் உட்பட பல மாநிலங்களில், இன்னமும் முழுமையாக அமல்படுத்தவில்லை. இந்நிலையில், யு.ஜி.சி., தலைவர் வேத் பிரகாஷ், பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய கடிதம்:விருப்ப பாடம் மற்றும் தர மதிப்பீட்டு கிரெடிட் முறையை அறிமுகம் செய்தால், மாணவர்களுக்கு பயன்கள் கிடைக்கும். அவர்களால் எளிதாக, விரும்பிய பாடங்களை படிக்கவும், விரும்பிய கல்வி நிறுவனங்களில் சேரவும் வழி ஏற்படும்.இன்னும், 30 சதவீத பல்கலைகளில், கிரெடிட் முறை அறிமுகம் செய்யவில்லை. எனவே, வரும் கல்வியாண்டு முதல், அனைத்து அரசு பல்கலை, நிகர் நிலை மற்றும் சுய நிதி பல்கலைகளில், கிரெடிட் முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்