தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி 11-முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப் புறநகர்
பகுதிகளில் பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மாணவர்களின் நோட்டு
புத்தகங்கள், சீருடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து 33 நாட்கள் பள்ளிகளுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர், நிலைமை சீரடைந்ததையடுத்து டிசம்பர்
14-ம் தேதி 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, பாடச்சுமை
காரணமாக அடுத்தடுத்து தேர்வுகளை எதிர்கொள்ளும் நிலையில் மாணவர்கள்
உள்ளதால், அரையாண்டுத் தேர்வுகளை ரத்து செய்து இறுதி தேர்வை நடத்த பல்வேறு
தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக, தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை
ஆலோசித்து தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஜனவரி 11-ம் தேதி முதல்
27-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.