தேர்தல் பாதுகாப்பு பணியில் என்.சி.சி., மாணவர்கள்.

வரும் 2016 பொதுத்தேர்தல் பாதுகாப்பு பணியில் என்.சி.சி., மாணவர்களை ஈடுபடுத்தும் திட்டம் உள்ளது. இதற்காக அவர்கள் குறித்த விபரங்களை தயார் செய்ய போலீசுக்கு தேர்தல் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக ஒவ்வொரு
மாவட்டத்திலும் தேர்தல் பாதுகாப்பு, தேர்தல் பணியில் ஆசிரியர், அரசு ஊழியர்களை பயன்படுத்துதல் போன்ற சில ஆரம்ப கட்ட பணிகளில் ஆணையம் ஈடுபட்டுள்ளது. 
               பாதுகாப்பு பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும்சூழலை தவிர்க்க, பள்ளி, கல்லுாரிகளில் உள்ள என்.சி.சி., மாண வர்களை பயன் படுத்தலாம் என, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.இதற்கான சில தகவல்களை பெற எஸ்.பி., அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அந்தந்த மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லுாரிகளில் என்.சி.சி., படை யிலுள்ள மாணவர்கள் எண்ணிக்கை பற்றி போலீசார் கணக்கெடுக்கின்றனர்.போலீசார் கூறுகையில்,“தேர்தல் பாதுகாப்பு பணியில் ஊர்காவல் படையை போன்று, என்.சி.சி., பிரிவு மாணவர்களை பயன்படுத்தலாம். தேர்தல் தேதி நெருங்குவதால் என்.சி.சி., படை குறித்து கணக்கெடுக்கப்படுகிறது.தேர்தல் நேரத்தில் ஏற்பாடு செய்ய இயலாது என்பதால் முன் கூட்டியேதயார் செய்கிறோம்,” என்றனர்.