பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணி

ஹெச்பிசிஎல் என அழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் GATE-2016 தேர்வின் மூலம் பொறியியல் பட்டதாரிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Mechanical & Production, Civil, Electrical, Electrical & Electronics, Electronics,
Electronics & Communication, Electronics &
Telecommunication, Applied Electronics, Instrumentation, Instrumentation & Control, Electronics &
Instrumentation, Instrumentation
& Electronics, Instrumentation
& Process Control, Chemica
l, Petrochemical, Petroleum Refining & Petrochemical,
Petroleum Refining பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: ஜூன் 2016 தேதியின்படி 25 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.264. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
மேலும் விவரங்கள் அறிய http://www.hindustanpetroleum.com/documents/pdf/Website%20detail%20AD%20GATE%2016%20-%20Final.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.