சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் 'தேன்காய்:' சேலத்தில் கிலோ ரூ.1,500க்கு விற்பனை

சேலம், :சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், தேன்காய்க்கு சேலத்தில் மவுசு அதிகரித்துள்ளது. கிலோ, 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்க்கரை நோயால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வரப்பிரசாமதாக கருதப்படும் தேன் காய், தமிழகத்துக்கு ஆந்திரா,
மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது.
காய் என்று சொல்லப்படும் நிலையில், அதன் முழு தோற்றம், காய்ந்த நெத்தமாக இருக்கிறது. வெறும் வயிற்றில்...இதன் மேல் பகுதியை பிரித்து விட்டு, உள்ளே இருக்கும் சிறிய விதையை, 48 நாள், வெறும் வயிற்றில் விழுங்கினால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வருகிறது என்பதால், இந்த காய்க்கு, சேலத்தில் மவுசு அதிகரித்துள்ளது.தட்டுப்பாடுடே காரணம்கடந்த அக்டோபர் மாதம் வரை, தேன் காய் கிலோ, 300 ரூபாய் முதல், 400 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், தற்போது காய் ஒன்று, 1.50 ரூபாய் என்ற வகையில், 48 காய்களை கொண்ட, முதல்தர பாக்கெட் (50 கிராம்), 80 ரூபாய்க்கும், இரண்டாம் தரம், 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கிலோ கணக்கில் வாங்கும் பட்சத்தில், 1,400 ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
தேன்காய்க்கு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், தட்டுப்பாட்டை காரணம் காட்டி வியாபாரிகள், அதன் விலையை அதிகரிப்பு செய்துள்ளது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாரம் 50 டன் விற்பனைசேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த தேன்காய் வியாபாரி, குணசேகரன் கூறியதாவது:வடஇந்தியாவில் குறிப்பாக குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மருந்தாக தேன்காய் பயன் படுத்தப்பட்டு வந்தது. இந்த காயை, சேலத்தில் உள்ள வடமாநிலத்தவர்கள் விரும்பி கேட்கத் துவங்கியதை அடுத்து, வடமாநிலங்களில் இருந்து வரவழைத்து விற்பனை செய்தோம்.
இந்த காயின் மருத்துவ குணம் குறித்த தகவல் பரவியதை அடுத்த, சேலம் மக்கள் அதிக அளவில், வாங்கி பயன் படுத்த துவங்கியதால், மவுசு அதிகரித்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் கிலோ, 400 ரூபாய்க்கு விற்றது, தற்போது, 1,500 ரூபாயாக உயர்ந்துள்ளது.தற்போது வாரத்துக்கு, 50 டன் வரை, விற்பனைக்கு வருகிறது.சர்க்கரை நோயாளிகள் தேன் காய்க்கு ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்லும் நிலை சேலத்தில் உருவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.