விரிவுரையாளர் தேர்வு பாடத்திட்டம் வெளியீடு

சென்னை: விரிவுரையாளர் போட்டி தேர்வுக்கான பாடத்திட்டம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்; மாவட்டங்களில் உள்ள கல்வியியல் ஆராய்ச்சி
நிறுவனம்; அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் போன்ற வற்றில் பணிபுரிய, போட்டித் தேர்வு மூலம், அவ்வப்போது விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.அதனால், தேர்வு எழுதுவோர், தேர்வுக்கு தயாராக வசதியாக, போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம், பாடங்கள் வாரியாக, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.