தேசிய திறனாய்வு தேர்வு எழுதுவோர் அதிகரிப்பு

சென்னை,:பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசு மூலம், ஆராய்ச்சி படிப்பு வரை உதவித் தொகை வழங்க, தேசிய திறனாய்வு தேர்வு
நடத்தப்படுகிறது. மாநில அளவில் நடக்கும் முதல் கட்ட தேர்வில், முதல், 300 இடங்களில் வருபவர்கள் தேசிய தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். தேசிய தேர்வின் தேர்ச்சி பட்டியலில், ஆயிரம் இடங்களுக்குள் வந்தால், உதவித் தொகை கிடைக்கும்.இதில் தேர்வாகும் மாணவர்கள், சர்வதேச பல்கலைகளில் எளிதாக சேர முடியும். தமிழகத்தில் இந்த தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை, சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஒரு லட்சத்துக்குள் தான் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு, 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது.