காய்ச்சலா: பன்றி காய்ச்சல் பரிசோதனை அவசியம்!

சென்னை:'ெவளிநாடு, ெவளி மாநிலங்கள் சென்று வந்தோர், காய்ச்சல் வந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும்' என, அரசு வலியுறுத்தியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில், பன்றிக்காய்ச்சல் அறிகுறியால், அடுத்தடுத்து இறப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே,
சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கான, மாநில அளவிலான ஆலோசனை கூட்டம், சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.தப்ப என்ன வழி?*பன்றிக்காய்ச்சல் தடுப்புக்காக, 11 லட்சம், 'டாமி புளூ' மாத்திரைகள்; 29 ஆயிரம்,' டாமி புளூ சிரப்' பாட்டில்கள், 5,250 உடல் கவசங்கள் உள்ளன. அரசின், ஏழு மையங்கள், தனியாரில், 13 மையங்களில் பன்றிக்காய்ச்சல் பரிசோதனை வசதி உள்ளது.
* அண்டை மாநிலம், ெவளிநாடு சென்று வந்தோர், காய்ச்சல் வந்தால், உடனே மருத்துவமனை சென்று, எவ்வித காய்ச்சல் என, ஆராய வேண்டும்*பன்றி காய்ச்சல் என சந்தேகம் இருந்தால், அவர்களும், குடும்பத்தினரும், 'டாமி புளூ' மாாத்திரை உட்கொண்டால் நோயை குணப்படுத்தலாம்.*இருமும் போதும், தும்மும் போதும் கைகுட்டையால், முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி, சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவ வேண்டும்*காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி இருந்தால், டாக்டரிடம் செல்லுங்கள்; சுயமாக, மருந்து உட்கொள்ள வேண்டாம்*மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், மருந்துக்கடைகளில் மருந்து, மாத்திரை தரக்கூடாது*காய்ச்சல் பாதிப்பு, சந்தேகங்களுக்கு, பொது சுகாதாரத்துறை ஆலோசனை மையத்தை, 044 - 2435 0496; 2433 4811; 94443 40496; 93614 82899 என்ற
எண்களில் தொடர்பு கொள்ளலாம்.*பன்றிக்காய்ச்சல் இறப்புக்களை தடுக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் பீதி அடைய வேண்டாம். சுகாதாரத்துறையினர், பொது மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.