66.11% இந்திய குழந்தைகளுக்கு தாறுமாறாக இருக்கும் சர்க்கரை அளவு: ஆய்வில் பகீர் தகவல்

நகரமயமாதலும், துரித உணவுகளின் காரணமாகவும், இந்தியக் குழந்தைகளில் 66.11 சதவீதம் பேருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குழந்தைகளின் உணவுப் பழக்க வழக்கம் மற்றும் விடியோ விளையாட்டு காரணமாக பிள்ளைகளின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் அதிக அளவில் வேறுபாடு இருப்பதாக எஸ்ஆர்எல் ஆய்வகப் பரிசோதனைக் கூடம் தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனை ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
நீரிழிவு என்பது அமைதியாக உலக மக்களை தாக்கி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.