புதிய 1 ரூபாய் நோட்டு ஆன்லைனில் விற்பனை.

புதிய 1 ரூபாய் நோட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு 1 ருபாய் நோட்டு அச்சடிக்க ரூ.1–14 செலவாகிறது. எனவே மத்திய அரசு கடந்த 1994–ம் ஆண்டு முதல் 1 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தி விட்டது. 
நாணயங்கள் மட்டும் புழக்கத்தில் இருந்து வந்தன. அதே போன்று
2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகளும் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தியது. ஆனால் அதற்கான விற்பனை ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஆன்லைனில் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் இந்த புதிய 1 ரூபாய் நோட்டுகளை பெரும்பாலானவர்கள் புழக்கத்தில் விடுவதில்லை. அதை பதுக்கி வைத்திருந்து கூடுதல் விலைக்கு தான் விற்க முயற்சிப்பார்கள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.