அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு எடுப்பது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு எடுப்பது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன்  வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடு
நிலைப் பள்ளிகளில் 6,7,8 வகுப்பு களில் படிக்கும் மாணவர்களின் கல்வியின்
தரத்தை உயர்த்த வும், ஒழுக்கத்தை நிலைநாட்ட வும், நடைமுறை வாழ்வில் நற்பண்பு கல்வியைத் தானே உணரும் வண்ணம் உற்சாகம் அளிக்கும் முறையில் நற்பண்பு கள் கொண்ட கல்வியை வழங்கு வதற்கு அந்த வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு பள்ளிப் பாடத்துடன் நற்பண்பு களை இணைத்து ’கற்பித்தலும் கற்றலும்’ என்ற சிறப்பு பயிற்சி அளிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர் கையேடு தயாரிக்கப்பட்டு அந் தந்த மாவட்டங்களில் பள்ளி களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் ஏற் கனவே ஒதுக்கப்பட்டுள்ள நற்பண்புகள் பாடவேளையை பயன்படுத்தி ஒரு வாரத்துக்கு ஒரு பாடவேளை என்ற முறையில் ஆண்டு முழுவதும் பள்ளிகளில் நற்பண்பு கல்வி அளிக்கப்படும். இதற்காக மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி சென்னையில் இன்றும் நாளை யும் (செவ்வாய், புதன்) நடை பெறும். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும், நற்பண்புக் கல்வி யில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட ஒரு முதுநிலை விரி வுரையாளர் அல்லது விரிவுரை யாளர் மற்றும் நடுநிலைப் பள்ளி களில் 6,7,8 வகுப்புகளை கையா ளும் (மொழிப்பாடம் மற்றும் சமூக அறிவியல்) ஆசிரியர்கள் இருவர், என, ஒரு மாவட்டத் துக்கு 3 பேர் வீதம் இப்பயிற்சியில் கலந்து கொள்கிறார்கள். முதன்மைச் கருத்தாளர் பயிற்சியினைத் தொடர்ந்து மாவட்ட அளவில் கருத்தாளர் களுக்கான பயிற்சி அந்தந்த மாவட்டங்களில் நவம்பர் 2, 3-ம் தேதிகளிலும் ஒன்றியங் களில் அல்லது அனைவரும் எளிதில் வந்து செல்வதற்கு ஏற்ற மையத்தில் நவம்பர் 5, 6-ம் தேதி களிலும் நடைபெறும். இந்த சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர் கள், பள்ளிகளில் நற்பண்புக் கல்வி வகுப்புகளில் நீதி போதனை அளிப்பார்கள். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு ஒரு பாடவேளை என்ற முறையில் ஆண்டு முழுவதும் பள்ளிகளில் நற்பண்பு கல்வி அளிக்கப்படும்.