அதிரடி கட்டுப்பாடு தயாராகிறது ஐ.ஐ.டி.,

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யில், 5,000 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், வெளிமாநில மாணவர்களே அதிகம். கல்லுாரி வளாகத்தில், இவர்கள் தங்க விடுதிகள் உள்ளன. கடந்த ஒரு
மாதத்தில் மட்டும், தனி அறையில் தங்கியிருந்த இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து, கல்லுாரி நிர்வாகம் நடத்திய ஆய்வில், தனி அறைகளில் தங்கும் மாணவர்கள் சிலர், மோசமான பழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பதும், அதனால் சில நேரங்களில், மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலைக்கு முயல்வதும் தெரியவந்து உள்ளது.
இதையடுத்து, விடுதிகளில் மாணவர்களுக்கு, தனி அறை வழங்குவதை நிறுத்த, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், இரவு நேர கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், வலைதளங்களில் வலம் வரும் ஆபாசங்களை பார்க்க முடியாமல் தடுக்கவும்,
திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்காக, கல்லுாரி வளாகத்தில் அளிக்கப்படும் இலவச, 'வை - பை' வசதியில், சில தடைகளை ஏற்படுத்துவது குறித்து, கல்லுாரி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.