சித்தா கலந்தாய்வு அனுமதி?அதிகாரிகள் டில்லியில் முகாம்

சித்த மருத்துவப் படிப்பு கலந்தாய்வை, 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பதால், மாணவர் சேர்க்கை அனுமதி பெற, தமிழக அதிகாரிகள் டில்லியில் முகாமிட்டு

உள்ளனர்.தமிழகத்தில், ஆறு அரசு கல்லுாரிகள் மற்றும், 21 சுயநிதி கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி உட்பட, ஐந்து விதமான இந்திய மருத்துவப் படிப்புகள் உள்ளன. இதில், 1,300 இடங்களுக்கு, 5,000 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
சென்னை, நெல்லை சித்த மருத்துவக் கல்லுாரிகளில், போதிய பேராசிரியர்கள் இல்லை என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி கவுன்சில், மாணவர் சேர்க்கைக்கு இன்னும் அனுமதி தரவில்லை.அதனால், விண்ணப்பித்து மூன்று மாதங்களாகியும், கலந்தாய்வு குறித்த அறிவிப்பு கூட வராதது, மாணவர்களை குழப்ப
மடைய செய்துள்ளது.இது குறித்து, 'நமது' நாளிதழிலில், சில தினங்களுக்கு முன், செய்தி வெளியானது. இந்நிலையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் மோகன் பியாரோ தலைமையிலான அதிகாரிகள், இரண்டு நாட்களாக, டில்லியில் முகாமிட்டுள்ளனர். வரும், 30ம் தேதிக்குள், கலந்தாய்வை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், அனுமதி பெறுவதற்கான கடைசி கட்ட முயற்சி மேற்கொண்டுள்னர். 'ஓரிரு நாட்களில் அனுமதி கிடைக்கும்' என, நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.