முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுக் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் 2015 ஆகஸ்ட் 12 முதல் 31 வரை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு,பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்தது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பொது மாறுதல் கலந்தாய்வு இன்னும் நடக்கவில்லை. வெகுதுார மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திற்குள் பணிசெய்ய முடியாமல் தவிக்கின்றனர்.இந்நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.கடந்த வாரம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு 2வது கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதில் இடம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு அளித்த பின், ஏற்படும் காலியிட அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவிக்கிறது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “10 ஆண்டு பணி நிறைவு முடித்த தகுதியான பட்டதாரி ஆசிரியருக்கு தேர்வு நிலை கிரேடு பதவிஉயர்வு வழங்கப்படும்.இதற்கு பின் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கிடைத்தால் 6 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும். தேர்வுநிலை கிரேடு இன்றி சிலர் பதவி உயர்வை தவிர்த்துள்ளனர். இதனால் 2ம் கட்ட முதுநிலை பதவி உயர்வு பட்டியல் வெளியாகிஉள்ளது.தேர்வு நிலை கிரேடு ஆசிரியர்கள் பதவி உயர்வை ஏற்கும் போது, முதுநிலைகாலியிடங்கள் ஓரளவிற்கு நிரம்பும். இதன் பின் நடக்கும் கலந்தாய்வில் அதிகமான பட்டதாரி ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்தில் அதிக வாய்ப்பை பெற கலந்தாய்வு தள்ளி போகலாம்,” என்றார்.