பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசு குறைப்பு: டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

அதேசமயம் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே சந்தை நிலவரத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. மேலும் டீசல் விலை 50 குறைக்கப்பட்டது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 பைசா குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.