3 நாள் விடுமுறை: மின் கட்டணம்கட்டுவதில் சிக்கல்

தொடர்ந்து, மூன்று நாட்கள் அரசு விடுமுறையாக வருவதால், 'மின் கட்டணம் செலுத்த, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தின், 2,800 பிரிவு அலுவலகங்களில், மின் கட்டண மையங்கள் உள்ளன.தொழிற்சாலைகளில், மாதம் தோறும்; வீடு, வணிகம் உள்ளிட்ட இணைப்புகளில், இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது.
கணக்கு எடுத்த தேதியில் இருந்து, 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும்; அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும், மீண்டும் இணைப்பு வழங்கப்படும். சரஸ்வதி பூஜை, விஜயதசமி, மொகரத்தை முன்னிட்டு, 21, 22, 23 ஆகிய, மூன்று நாட்களுக்கு அரசு விடுமுறையாக வருகிறது. இதனால், அன்றைய தினங்களில், மின் கட்டண மையங்கள் செயல்படாது.எனவே, 'மின் கட்டணம் செலுத்த, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என, மின் வாரியத்திற்கு, மின் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.