இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர் பணியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 30.10.21015 அன்று நடைபெற உள்ளது.

இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர் பணியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 30.10.21015 அன்று நடைபெற உள்ளது.

இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியராக இருந்து பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் உரிமைக்காக போராடி வரும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் கௌரவ தலைவர் திரு.ஆ.வ அண்ணாமலை, மாநில தலைவர் திரு. சின்னசாமி, மாநில பொதுச் செயலாளர் திரு. பெனின் தேவகுமார் ஆகியோர் பள்ளிக் கல்வி இணை இயக்குநரகத்தில் இருந்து பெறப்பட்ட தகவலினை பகிர்ந்து கொண்டனர்.

30.10.21015 அன்று நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் பாடவாரியாக 01.01.2015 நிலவரப்படி தகுதிவாய்ந்தவர்கள் அழைக்கப்பட உள்ளனர். இதன் விவரம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

1. தமிழ் பாடம்
காலிப்பணியிடம் / 183
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ள ஆசிரியர்கள் / 500 பேர்.
2. ஆங்கிலம்
காலிப்பணியிடம் / 21
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ள ஆசிரியர்கள் / 70 பேர்.
3. கணிதம்
காலிப்பணியிடம் / 24
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ள ஆசிரியர்கள் / 49 பேர்.
4. அறிவியல்
காலிப்பணியிடம் / 21
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ள ஆசிரியர்கள் / 42 பேர்.
5. வரலாறு மற்றும் புவியியல் பாடம்
காலிப்பணியிடம் / 123
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ள ஆசிரியர்கள் / 203 பேர்.

இந்த கலந்தாய்வு இணையதளம் மூலமாக நடைபெற உள்ளது.

பதவி உயர்வு பெற உள்ள அனைத்து ஆசிரியர் ஆசிரியைகளுக்கு நமது சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.