கட்டாய தலைக்கவச உத்தரவு: மறுபரிசீலனை செய்யக் கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

கட்டாய தலைக்கவச உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரும் சீராய்வு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  கட்டாய தலைக்கவச உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஆர்.முத்துக்கிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.


       இந்த மனு, நீதிபதி என்.கிருபாகரன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரே ஆஜராகி வாதிட்டார். 
 இதன்பிறகு, மனுதாரர் பாதிக்கப்பட்ட நபர் இல்லை. மூன்றாவது நபர்தான். 
 தலைக்கவசம் அணியாமல் செல்வோரின் உயிரிழப்பு அதிகமாவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.