பெட்ரோல் விலை உயர்வு தள்ளிவைப்பு

புதுடில்லி: சர்வதேச சந்தையில் நிலவும் விலை அடிப்படையில், இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.

அதன்படி, மாதம் இரு முறை, இவற்றின் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை, சற்று ஏற்றம் கண்டு வருகிறது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து, 66 ரூபாய்க்கு கூடுதலாக வர்த்தகம் ஆகிறது.

இந்நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, நேற்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு, ஒரு ரூபாயும், டீசல் விலை, லிட்டருக்கு 2.28 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விலை உயர்வு எதுவும் நேற்று அறிவிக்கப்படவில்லை.பீகாரில் வரும் அக்டோபர் 12 முதல், ஐந்து கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதை மனதில் வைத்தே, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன