சட்டப்படிப்பு கவுன்சிலிங் துவக்கம்

சென்னை:தமிழகத்திலுள்ள, ஏழு அரசு சட்டக் கல்லுாரிகளில், மூன்று ஆண்டு சட்டப்படிப்பு படிப்பதற்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது.தமிழகத்தில், டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலையின் கட்டுப்பாட்டில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் வேலுாரில் அரசு சட்டக் கல்லுாரிகள் செயல்படுகின்றன; இங்கு, மூன்று ஆண்டு
சட்டப்படிப்பான - எல்.எல்.பி., படிக்க, 5,000 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியலை பல்கலை வெளியிட்டு உள்ளது.

இந்த பட்டியலின்படி, ஏழு கல்லுாரிகளில் உள்ள, 1,252 இடங்களுக்கு கலந்தாய்வு அடிப்படையில், நேற்று முதல் மாணவர் சேர்க்கை துவங்கியது. வரும் 13ம் தேதிக்குள், கலந்தாய்வை முடித்து, 14ம் தேதி முதல் வகுப்புகளை துவங்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
முதல் நாளில் பங்கேற்ற மாணவர்களில் பலர், சென்னை, மதுரை மற்றும் திருச்சி சட்டக் கல்லுாரிகளை தேர்வு செய்தனர்.