வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை:வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் வகையில், வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தப் பணிகளை பார்வையிட, 15 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரும் ஜனவரி, 1ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு, 18 வயது நிறைந்தவர்களுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் துவங்கிஉள்ளன. இதற்கான வரைவு பட்டியலை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில், 5.66 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.வரும் ஜனவரி, 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, 18 வயது நிரம்புவோர், தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

ஏற்கனவே பட்டியலில் உள்ள வாக்காளர்கள் பெயர், முகவரி உள்ளிட்டவற்றில், திருத்தம் செய்து கொள்ளலாம்.இதுதொடர்பாக, உள்ளாட்சி மன்றங்கள், குடியிருப்போர் சங்கங்களின் சார்பில், நாளை மற்றும் செப்.,30ம் தேதி சிறப்பு விளக்க கூட்டங்கள் நடத்தப்படும். செப்., 20 மற்றும் அக்.,4ம் ஆகிய நாட்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்த முகாம் நடக்கும்.
இந்தப் பணிகளை பார்வையிட, 15 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு, மாவட்ட வாரியாக கண்காணிப்பு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களை, http://elections.tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.