இன்று வெளியாகிறது நேதாஜி ஆவணங்கள்: மர்மம் விலகுமா?

கோல்கட்டா: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த 64 ஆணவங்களை மேற்குவங்க அரசு இன்று வெளியிட உள்ளது. இதன் மூலம் பலவருடங்களாக அவரது மறைவில் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவரலாம் என தெரிகிறது.சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய தேசிய ராணுவத்
தினை (ஐ.என்.ஏ. நிறுவியவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த மர்மங்கள் இன்று வரை விடை தெரியாமல் இருந்து வருகிறது. 1945-ம் ஆண்டு தைவான் விமான விபத்தில் அவர் இறந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. முரண்பட்ட தகவல்களால் மத்திய அரசும் அவரது ஆணவங்களை வெளியிடுவதில் தயக்கம் காட்டி வருகிறது.
தகவலறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிடக்கோரி மனு செய்தனர். இதற்கு மத்திய அரசு,பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்து வந்தது. வெளிநாடுகளுடனான வெளியுறவு பாதிக்கும் எனவும் பதில் அளித்துள்ளது.நேதாஜி குறித்து மத்திய அரசு வசம் 130 ஆவணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று வெளியாகிறது
இந்த பரபரப்பான சூழ்நிலையில் மேற்குவங்க மாநில அரசும் தங்கள் வசம் நேதாஜி குறித்த ஆவணங்களை வைத்துள்ளது.இது தொடர்பாக அம்மாநில ஆளும் திரிணாமுல் காங். முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த வாரம் தடாலடி அறிவிப்பை வெளியிட்டார். அதில் நேதாஜி குறித்த 64 ஆவணங்கள் வெளியிடப்படும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பிற்கு நேதாஜியின் உறவினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இன்று கோலகட்டா காவல்துறை அருங்காட்சியகத்தில் நேதாஜி குறித்த ஆவணங்கள் வெளியிட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.இதற்காக நேதாஜியின் உறவினர்கள் ஆவணங்களை பார்க்கும் ஆர்வமுடன் வந்துள்ளனர்.
கோல்கட்டா போலீஸ் இணை கமிஷனர் ராஜிவ் மிஸ்ரா கூறியதாவது: இன்று காலை 930 மணிக்கு நேதாஜி ஆவணங்கள் வெளியிடப்படும். இதில் 1937-ம் ஆண்டு 1947-ம்ஆ ண்டு வரையில் கிடைத்த வகையில் மேற்குவங்க உளவுப்பிரிவு போலீசார் 9 ஆவணங்களும், கோல்கட்டா சிறப்புப்படை போலீசார் 55 ஆவணங்கள் என 64 ஆவணங்கள் வெளியிடப்பட உள்ளது என்றார்.
ஆவணங்கள் எவை:
* நேதாஜி தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதங்கள்.
* இந்திய தேசிய ராணுவம் நிறுவுவதற்காக திட்டம் தீட்டியது குறித்த கடிதங்கள்.
* காங். கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தியால் பார்வர்டு பிளாக் கட்சி துவக்கியது.