தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாய்; பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் போது, மாதம், 2,000 ரூபாய் கல்வி உதவித்தொகை, மத்திய அரசால்
வழங்கப்படுகிறது.இதற்கான நுழைவுத் தேர்வு, முதலில் மாநில அளவில் நடக்கும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, தேசிய அளவில் தேர்வு நடக்கும்.

மாநில தேர்வு, தமிழகத்தில், நவ., 8ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, பள்ளிக் கல்வித்துறையின் அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தேர்வு எழுத விரும்புவோர், பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 'விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான அவகாசம், வரும், 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், வரும், 10ம் தேதி வரை, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.-