காந்தி எழுதிய கட்டுரைகள் 2 'டிவிடி'க்களில் வெளியீடு

புதுடில்லி: மகாத்மா காந்தியின் கட்டுரைகள், தகவல்கள் அடங்கிய, 100 தொகுப்புகள், இரு 'டிவிடி'க்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி, இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது, அருண் ஜெட்லி பேசியதாவது:தகவல் தொடர்புத்துறை அமைச்சகம், 1994ல், மகாத்மா காந்தி எழுதிய கட்டுரைகள், அவரை பற்றிய தகவல்கள் அடங்கிய தொகுப்புகளை, புத்தகங்களாக வெளியிட்டது; இவை, இந்தி மொழியிலும் பதிப்பிக்கப்பட்டது. இப்போது, இவை இரண்டு, 'டிவிடி'க்களாக தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை, இணையதளத்திலும் பெறலாம்.மகாத்மா காந்தி, வழக்கறிஞராக பணியாற்றினார். இருப்பினும், கல்வி, மருத்துவம், பொருளாதார விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, அவர் எண்ணற்ற கட்டுரைகள் எழுதி உள்ளார். அவர் பேசாத, எழுதாத விஷயங்களே இல்லை எனக் கூறலாம். இவ்வாறு அருண் ஜெட்லி பேசினார்.